பின்னர், பல திரைப்படங்களில் கிராமப்புறப் பெண்ணாக அவர் வேடம் ஏற்றார். இத்திரைப்படங்களில், அவர் வேடம் ஏற்ற நாட்டுப் பெண்டிர், சில சமயம் அன்பாகவும், சில சமயம் அழகாக இருந்தனர். இது கீழை உலகின் மகளிர் ஈர்ப்புத் தன்மையை முழுமையாக காட்டுகின்றது.
1980ஆம் ஆண்டுகளில் பார்வையாளர் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்த சீனத் திரைப்படத்தின் "நூறு மலர் பரிசும்", திரைப்படத் துறை திறனாய்வாளர் தெரிவு செய்த "தங்கச் சேவல் பரிசும்" இன்ன பிற பரிசுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டுகளில் பல இளம் நடிகர் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளனர். இதனால் நடுத்தர வயது நடிகையர், திரைப்படம் தயாரிக்கும் வாய்ப்பும் குறைந்துள்ளது. இதை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது—
"என்னைப் பொறுத்த வரை, வெளியுலகம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், என் மனதில் பொது மக்கள் எனும் துலாக்கோல் ஒன்று இருக்கிறது. எங்கள் ரசிகர்களின் மனதிலும் துலாக்கோல் ஒன்று இருக்கிறது. கண்டிப்பான முறையில் நாடகச் சுவடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இது குறித்து நான் மனநிறைவு அடைகிறேன். தன் விருப்பப்படி திரைப்படம் தயாரிப்பதில்லை. ஆனால் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், முழு மனதுடன் அதில் ஈடுபட்டே தீர்வேன். திரைப்படத்தில் என் பாத்திரத்தை உணர்ந்து, ஆழமாகவும் உண்மையாகவும் நடிப்பேன்" என்றார் அவர்.
1 2 3
|