ஓங் பு லியின் குடும்பம் இன்பமயமானது. அவருடைய கணவர் ஓங் சியுன் ஒரு நடிகராவார். அவர் மனைவிக்கு அமோக ஆதரவு அறித்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இன்பமான வாழ்க்கை, அவருக்கு அதிக குடும்ப பாசத்தை உருவாக்கியுள்ளது. அவர் கூறியதாவது—
"உண்மையில் பணியில் நான் வெகுவாக ஈடுபடுகிறேன். என் பணிக்கு எனப் பலவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். இதில் மனநிறைவின்மை இல்லை. ஆனால், சில வேளைகளில் வீட்டுத் தேவை எனக்கு ஏற்படும் போது, என் பிள்ளைக்காக என் குடும்பத்துக்காக என் பணியில் எனக்கு துணையாக இருக்கும் வாய்ப்பினை நான் கைவிடுவேன். நடிகை என்ற முறையில் இது வருத்தத்துக்குரியது. ஆனால், ஒரு பெண்மணி, மனைவி, தாய் என்ற முறையில், நான் எவ்வித மனநிறைவின்மையும் பெறவில்லை" என்றார் அவர்.
ஓங் பு லி, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினராவார். அவர் தமது ஓய்வு நேரத்தில் அடிக்கடி பொது மக்களைச் சந்திக்கிறார். பொது மக்களுக்காக யதார்த்த பிரச்சினையின் தீர்வுக்கான கருத்துருக்களை அரசாங்கத்திடம் வழங்குகிறார். மேலும் ஓங் பு லி அம்மையார் பொது நலத்துறையில் பேரார்வத்துடன் ஈடுபடுகிறார். அண்மையில் அவரும் பல சூழல் பாதுகாப்புத் தொண்டரும், "தூய்மையான சீனா, பெரும் சுவரை கட்டியமைக்கும்" எனும் பல சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.
சீனக் கலைஞரின் தலைசிறந்த பிரதிநிதி என்ற முறையில், ஒழுக்கநெறி, நடிப்பு நுட்பம் இரண்டிலும் சிறந்து விளங்கும் கலைஞர் என்ற புகழாரம் அவருக்கு சூட்டப்பட்டது. இது குறித்து, அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது—
"நான் பீகிங் இசை நாடகம் கற்றுக்கொண்டு, இது வரை 40 ஆண்டு ஆகின்றது. ஒழுக்கநெறியிலும் நடிப்பு நுட்பத்திலும் திறந்த விளங்குவதென்பது என் குறிக்கோளாகும், இவ்விரண்டிலும் ஒழுக்கநெறி முதலிடத்தில் இருக்க வேண்டும். பொது மக்களின் அடிச்சுவட்டைச் சிறப்பாகப் பின்பற்றி, படைப்புப் பணியில் ஈடுபட வேண்டும்" என்றார் அவர். 1 2 3
|