சீன மக்களிடையே, குவாங்சோவில் உண்பது என்ற கூற்று பரவிவருகின்று. அதாவது, குவாங்சோ மாநகரின் உணவுப் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பு மிக்கது. குவாங்துங் சர்வதேச சுற்றுலா பணியகத்தின் வழிகாட்டி யெஜெஒவு கூறியதாவது--
குவாங்சோவில் உண்பது, வன விலங்கை உண்பது என்று பொருட்படாது. அது, குவாங்துங் உணவு வகையை முக்கியமாகக் கொண்டு, சீனாவின் 8 முக்கிய கறிவகைகளையும் உலகின் பிரபல உணவுவகைகளையும் கொண்ட உணவு வகையைக் குறிக்கின்றது. நிறம், மணம், சுவை, வடிவம் என்பன, குவாங்சோ உணவின் தனிச்சிறப்பாகும். தவிர, குவாங்சோ உணவு வகைகளில், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து, பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளின் உணவு வகைகளும் சேர்ந்துள்ளன என்றார் அவர்.
குவாங்சோவில் உணவு வகை அதிகம் என்பது ஒன்று. சமையல் முறை கூடுதலானது என்பது மற்றொன்று. குவாங்சோவில் பலர், விடியற்காலையில் காலை உணவு உண்பர். வேறு சிலர், விடியற்காலை வரை இரவு உணவு உண்பர்.
குவாங்சோவின் பெரிய வீதிகளிலும் சிறிய வீதிகளிலும் உணவகங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, வீதியோரத்தில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் நங்கையர் சிலர், அமர்ந்து, ஹுன்தன் என்னும் ஒரு வகை உணவை விரைவாகத் தயாரித்துக்கொண்டிருந்தனர். 2 அல்லது 3 நிமிடத்துக்குப் பின், சூடான ஹுன்தன் சமைக்கப்பட்டு, விருந்தினருக்கு வழங்கப்பட்டது. இது போன்ற நிலைமை, குவாங்சோ வீதியில், தாராளமாக காணப்படுகிறது.
1 2 3
|