• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-18 16:25:21    
குவாங்சோ உணவு வகை

cri

இது தவிர, குவாங்சோவில் நீண்ட வரலாறுடைய புகழ்பெற்ற உணவகங்களும் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த உணவகங்களும் பல உள்ளன. இவற்றில் பூங்கா(தோட்ட)வடிவ உணவகங்கள் குறிப்பிடத் தக்கவை. வேறுபட்ட தனிச்சிறப்பியல்புடைய இவ்வுணவகங்களில், சில சொகுசான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் பண்டைக்கால மணம் கமழ்கின்றன. சிலவற்றில் நவீனமயகாக்கம் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பான்சி உணவகமும் நான்யுன் உணவகமும் சிறந்த சுற்றுச்சூழலைக் கொண்ட உணவகங்களாகும். தவிர, ஒவ்வொரு உணவகத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த உணவு வகைகள் உள்ளன. குவாங்சோவில், புகழ்பெற்ற முதலாவது உணவகம் என்று அழைக்கப்படும் குவங்சோ உணவகத்தில் தயாரிக்கப்பட்ட வன்சாங் கோழி, மூன்று நிறங்களைக் கொண்ட LOBSTER எனப்படும் பெருங்கடல் நண்டு முதலியவை சுட்டத் தக்கவை.

குவாங்சோ மாநகரில், சீனாவின் இதர பிரதேசங்கள் மற்றும் வெளிநாடுகளின் உணவுகளையும் சுவைத்துப் பார்க்கலாம். வாழைப்பழ இலையின் மணம் கமழும் உணவகமானது, தாய்லாந்து உணவை முக்கியமாகக் கொண்ட உணவகமாகும். வாழைப்பழம், durian, புத்தர் சிலை முதலியவை காணப்படும் இவ்வுணவகத்தில் நுழைந்ததும், தென்கிழக்காசிய நாடுகளின் பாவனையை உணரலாம். தாய்லாந்தில் பல உணவுகள், வாழைப்பழ இலையில் மடித்துவைக்கப்பட்டுச் சமைக்கப்பட்டவை. அவை, மீன், கோழி முதலியவை ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த சீன மரபுவழி ஹுங்ஜின்பு என்பவர், குவாங்சோவுக்கு வருகை தரும் போதெல்லாம் இவ்வுணவகத்தில் உண்பது வழக்கம். அவர் கூறுகின்றார்-- 

இங்குள்ள சூழ்நிலை நன்று. இவ்வுணவகத்தில் உணவை உண்ண விரும்புகின்றேன். உணவு, தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது என்பது, இதற்குக் காரணமே. நண்டுக்கறி, வாழை ரொட்டி, பொலட் ஆகியவற்றின் சுவை, குவாங்துங் உணவு வகை, சிச்சுவான் சாங்காய் உணவு வகைகளின் சுவையிலிருந்து வேறுபடுகின்றது. சுவை மிக்கது என்றார் அவர்.

1  2  3