
இவ்வுணவகத்தில் உணவு உண்ணும் போது, வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுகின்றது.
ஹவாய், தாய்லாந்து மற்றும் இந்திய ஆடை அணிந்த பணியாளர் பயணிகளுக்குச் சேவை புரிகின்றனர். இவ்வுணவகம், சீன-வெளிநாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்ற இடமாகத் திகழ்கின்றது.
 
விருந்தினர், உணவைச் சுவைக்கும் அதே வேளையில் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கலைஞர்கள் அரங்கேற்றும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம். பிலிப்பைன் நங்கை ஒருத்தி, பிலிப்பைன் நாட்டுப்புறப்பாடலைப் பாடிமுடித்ததையடுத்து, சீனப் பாடலையும் பாடினார். சீன விருந்தினர் கரவொலி எழுப்பினர்.
தென்னாப்பிரிக்கப் பயணி, ஆலென் புர்ச்சுக்கு குவாங்சோ உணவு மிகவும் விருப்பம். அவர் கூறுகின்றார்,

குவாங்சோ உணவு வகையும் காய்கறி மற்றும் இறைச்சி வகையும் அதிகமானவை. சுவையானவை. சீன மக்களின் வாழ்க்கை, நவீன மயமான வாழ்க்கை. உணவகங்களின் அலங்காரமும், தனிச்சிறப்பியல்புடையது. குவாங்சோவுக்கு வருகை தந்து, இங்குள்ள பண்பாட்டு மற்றும் நடையுடை பாவனைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி என்றார் அவர். 1 2 3
|