• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-22 10:49:31    
கடந்த வாரம் உலகில் நிகழ்ந்த விளையாட்டுப் போட்டிகள்

cri

பூப்பந்து சீனப் பூப்பந்து ஒப்பன் போட்டி 14ந் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் நிறைவடைந்தது. சீன அணி மொத்தம் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டி சீன வாரர்களுக்கிடையில் நடைபெற்றது. சீன வீரர் லின் தான் 2-0 என்ற செட் கணக்கில் தம் அணி தோழரான பௌ சுன்லையைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை சியே சிங் பாங், சீன ஹாங்காங் வீராங்கனை வாங் சென்னைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகளான யாங் வெய், சாங் சியே வென் ஜோடி, 15-14,15-12 என்ற கணக்கில் தமது அணிதோழியர்களான வெய் யீ லி, சௌ திங் திங் ஜோடியைத் தோற்கடித்து முதலிடம் பெற்றனர்.

பனிச்சறுக்கல் 2004ஆம் ஆண்டு சீனக் கோப்பைக்கான உலக உருவப் பனிச்சறுக்கல் போட்டி 14ந் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. சீன வீரர் சௌ ஹொங்போ வீராங்கனை சென் சியே ஜோடி இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றனர். சீன வீரர் லீ செங் சியாங் ஒற்றையர் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.

கால் பந்து 17ந் நாள் இரவு சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்ற உலக கோப்பைக்கான கால் பந்து போட்டியின் ஆசிய பிரதேசத்து தேர்வு போட்டியின் நான்காவது பிரிவுப் போட்டியில் சீன அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீன ஹாங்காங் அணியைத் தோற்கடித்த போதிலும், மொத்த கோல் கணக்கில் சௌதி அரேப்பிய அணியை விட குறைவாக இருப்பதனால், உலக கோப்பைக்கான போட்டியில் கலந்துகொள்ள தகுதி இழந்துவிட்டுள்ளது.

1  2  3