• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-22 10:49:31    
கடந்த வாரம் உலகில் நிகழ்ந்த விளையாட்டுப் போட்டிகள்

cri

ஹாக்கி 12வது உலக மகளிர் ஹாக்கி சாம்பியன் பட்டப் போட்டி 14ந் நாள் ஆர்ஜென்டினாவின் ரோசரியோ நகரில் நிறைவுற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். சீன அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்து 5வது இடம் பெற்றது. 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக, பயிற்சி செய்வது என்பது, ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின் உருவான சீன மகளிர் ஹாக்கி அணி இப்போட்டியில் கலந்துகொள்வதன் முக்கிய கடமையாகும்.

மேசைப் பந்து சர்வதேச மேசைப் பந்து தொழில் முறை சுற்றுப் போட்டி15ந் நாள் லெப்திகில் முடிவுற்றது. சீன வீராங்கனை நியூ சியன் பெங் மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் தமது அணிதோழியான கோ யேயுடன் ஒத்துழைத்து மகளிருக்கான இரட்டையர் போட்டியிலும் முதலிடம் பெற்றனர். இப்போட்டியில் சீன வீரர்கள் தோல்வி கண்டனர்.

வாள் போட்டி 2004ஆம் ஆண்டு அனைத்து சீன வாள் சாம்பியன் பட்டப் போட்டி ஜியாங்சு மாநிலத்தின் நான்துங் நகரில் நிறைவடைந்தது. ஜியாங்சு அணி 7 தங்கப் பதக்கங்களைப் பெற்று முதலிடம் பெற்றது. குவாங்துங் அணி 3 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பெற்றது. தியன்சின் அணியும் லியோநிங் அணியும் தலா ஒரு தங்கப் பதக்கம் பெற்றன. ஐஸ்ஹாக்கி 2006ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான ஐஸ் ஹாக்கி தேர்வுப் போட்டியின் கடைசி சுற்றுப் போட்டி 14ந் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. சீன மகளிர் அணி 2-3 என்ற கோல் கணக்கில் சுவீட்சர்லாந்து அணியிடம் தோல்வி கண்டு, 2006ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை.

1  2  3