• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-24 15:04:26    
ஹென்சான் கோயில்

cri

சீனாவில் துவக்கப் பள்ளி கல்வியறிவு பெற்றவர் அனைவருக்கும் சுசோ புறநகரிலுள்ள ஹென்சான் கோயில் பற்றி நன்கு தெரியும். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்,தாங் வமிச ஆட்சிக் காலத்திலான பிரபல கவிஞர் சாங்ச்சியெ,இக்கோயில் பற்றி இயற்றிய கவிதை,சீனாவின் துவக்கப் பள்ளியின் சீன மொழி பாட நூலில் சேர்க்கப்பட்டிருப்பது,இதற்குக் காரணமாகும். பல ஆண்டுகளாக,மிக அதிகமானோர் இக்கவிதை மூலம் ஹென்சான் கோயிலை அறிந்துகொண்டுள்ளனர். அத்துடன்,இக்கவிதையில் வர்ணிக்கப்பட்ட அழகான இயற்கை காட்சியினால்,ஹொன் சான் கோயிலைப் பார்வையிட,அவர்கள் தொலைவிலிருந்து சுசோவுக்கு வருகை தந்தனர். சுமார் 1400 ஆண்டு வரலாறுடைய ஹொன்சான் கோயில்,புத்த மதக் கோயிலாகும். அதன் பரப்பளவு 10 ஆயிரம் சதுர மீட்டராகும்.மண்டபத்தின் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மணிக்கூண்டு உண்டு. புத்தாண்டு மலரும் போதெல்லாம்,கவலையை நீக்கி,அருமையான எதிர்காலம் தருமாறு,வழிபாடு நடத்த மக்கள் இக்கோயிலுக்கு வந்து மணியோசையைக் கேட்பது வழக்கம்.

ஹென்சான் கோயில் பற்றி பல கதைகள் உள்ளன. இவற்றில் ஒன்று மக்களிடையே பரவலாகப் பரவிவருகின்றது. வழிகாட்டி தன்தன் கூறுகின்றார், துறவிகளான ஹென்சானும் ச்தேவும் இக்கோயிலின் தலைவர்களாவர். முடிவு மேற்கொள்ளும் போது,அவர்கள் இருவரும் தன்னடக்கத்துடன் இருப்பதன் காரணமாக,அடிக்கடி முடிவு மேற்கொள்வது சிரமம். ஒரு நாள்,கோயிலின் முன்வாசலில், ஒரு மூதாட்டியை அவர்கள் கண்டனர். கோயில் தலைவருக்கு மந்திர வித்தை தேவை. நீங்கள் இருவரும் அவரவர் திறமையைக் காட்டுங்கள். யாருடைய மந்திர வித்தை உயர்வோ,அவரே கோயிலின் தவைவராக விளங்குவார். அவருடைய பெயரே இக்கோயிலின் பெயர் என்றார் மூதாட்டி.

1  2  3