• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-24 15:04:26    
ஹென்சான் கோயில்

cri

சீனாவில்,சுசோ நகரின் ஹென்சான் கோயில் பற்றிக் குறிப்பிடும் போது,கோயிலுள்ள மணிக்கூண்டு பற்றி குறிப்பிடுவது உறுதி. வழிகாட்டி தென்தென் கூறுகின்றார், ஓர் ஆண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரிலுள்ள ஒரு மணிக்கூண்டைக் காப்பாற்றும் போது ச்தே காணாமல் போனார். ச்தே இறந்துவிட்டார் என்று கருதிய ஹென்சான் மிகவும் வருத்தம் அடைந்தார். ஆனால்,உண்மையிலே,சதே,இம்மணிக்கூண்டைப் படகாகப் பயன்படுத்தி,கிழக்கு நோக்கி ஜப்பானுக்குச் சென்றுவிட்டார். இதனால்,தற்போது ஜப்பானில் சதே கோயில் உள்ளது. ஹென்சானும் சதேவும் மணியோசை மூலம்,ஒருவரை ஒருவர் நினைக்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது,இரு இடங்களிலும் மணியோசை ஒலிக்கின்றது. இதன் காரணமாக,ஜப்பானிய பயணிகள் பலர்,சுசோ நகரிலுள்ள ஹென்சான் கோயிலுக்கு வருகை தருவது வழக்கம். புத்தாண்டு வரும் போதெல்லாம்,ஹென்சான் கோயிலில் மணியோசை கேட்டல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11:42 மணிக்கு ஹென்சான் கோயிலின் தலைவர் மணியை அடிக்கும் போது, அங்குள்ள பயணிகள் அனைவரும் கணக்கிடுவர். 108வது மணியோசைக்குப் பின்,கோயிலுக்கு வெளியே,பட்டாசுகள் கொளுத்தப்படும். குதூகலமான சூழ்நிலைகாணப்படும்.

ஹென்சான் கோயிலுக்கு வந்து,மணிக்கூண்டை அடிப்பதும் மணியோசை கேட்பதும் இவ்விடத்தில் உலா மேற்கொள்ளும் பயணிகளின் இன்றியமையாத நிகழ்ச்சியாக மாறியுள்ளது. ஓர் ஆண்டில்,பல பத்து முறை பயணிகளை ஹென்சான் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு வருவதாக,வழிகாட்டி தன்தன் கூறினார். இப்பயணிகளில் சிலர்,உள் நாட்டுப் பயணிகள். ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகளும் உண்டு. இக்கோயிலுக்கு வருகை தரும் பயணிகள்,மணிக்கூண்டை அடிக்க விரும்புகின்றனர் என்றார் அவர். உண்மையிலே,சுசோ நகரின் அதிகமான அழகான காட்சித் தலங்களில்,ஹென்சான் கோயில் சாதாரணமானது. இவ்வளவு அதிகமான பயணிகள் இக்கோயிலுக்கு வருகை தருவதற்கு,சீனப் பண்பாட்டின் எல்லையற்ற கவர்ச்சியாற்றல் தான் காரணமாகும். ஹென்சான் கோயிலின் மணியோசை,சுசோ புறநகரில் சுமார் 1000 ஆண்டுக் காலம் எதிரொலித்திருக்கிறது. அது தொடர்வது உறுதி.

1  2  3