
அதன் பின்,கோயிலுக்கு முன்னாலுள்ள ஆற்றைச் சுட்டிக்காட்டி மூதாட்டி கூறுகிறார்: இந்த ஆற்றின் மேல்,பாலம் இல்லை. கிராமவாசிகள் போய்வருவது சிரமமாக உள்ளது. நீங்கள் மந்திரத்தைப் பயன்படுத்தி,பாலத்தை உண்டாக்குங்கள். எவரால் முடிகிறதோ,அவர் தான் திறமையானவர் என்றார் மூதாட்டி. ச்தெ முதலில் மந்திரத்தைப் பயன்படுத்தினார். தமது ஆடையைக் கழற்றி,ஆற்றை நோக்கி வீசியெறிந்தார். ஆடை,ஒரு பாலத்தின் மேற் பகுதியாக மாறியது. ஆனால்,பாலத்தின் கீழ் மரச்சட்டம் இல்லாததால்,காற்று வீசிய போது,அது அசைந்து விழ்ந்துவிடும் நிலையில் இருந்தது. ஹென்சான்,உடனே,தமது கைத் தடியை ஆற்றின் கரையில் போட்டு மந்திரத்தைப் பயன்படுத்தினார்.கைத்தடி ஒரு மரமாக மாறி,ஆற்றுக் குறுக்கே சென்றதால்,முழுமையான பாலம் ஆற்றின் மேலே உருவாயிற்று. ஹென்சானின் திறமை அதிகம் என்று மூதாட்டி கூறினார். எனவே,ஹென்சான்,இக்கோயிலின் தலைவராகியானார். இக்கோயில்,ஹென்சான் கோயிலென பெயர் பெற்றது. சீனாவின் அனைத்துக் கோயில்களிலும் இக்கோயில் மட்டுமே துறவியினால் புகழ்பெற்றது. இதுவரை,ஹென்சான் கோயிலில்,ஹென்சான் மற்றும் சதேவின் உருவச்சிலை காணப்படலாம். இத்துறவிகள்,சாதாரண
துறவிகளிலிருந்து வேறுபடுகின்றனர்.
அவர்கள்,விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் போல காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவர்,கையில் தாமரைப் பூ ஏந்திய வண்ணம் அமர்ந்திருகின்றார். மற்றொருவர்,கையில் பெட்டியை ஏந்திய வண்ணம் இருக்கின்றார். அவை,அவர்களுடைய மதக் குருமார் மரணமடைவதற்கு முன் அவர்களுக்குத் தந்தவை. இருவரும் இணக்கமாக இருப்பது என்பது மதக் குருமாரின் நோக்கமாகும். ஹென்சான் கோயிலில் நடந்துசெல்லும் போது,மிகுந்த பண்பாட்டுச் சூழ்நிலையைப் பயணிகள் உணரலாம். இக்கோயிலில் கற்சாசனம் இடம்பெறும் ஊடுவழியில்,சீன வரலாற்றில் அறிவாளர் இயற்றிய கவிதையும் அவர்களுடைய நேர்த்தியான சீன கையெழுத்துக்களும் உள்ளன. கற்சாசனத்தில் செதுக்கப்பட்ட கவிதைகள் பல,சீனாவின் நேர்த்தியான கையெழுத்துக்களில் உள்ளடங்கும் பலவிதமான பொருளை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன. 1 2 3
|