கடந்த மூன்று ஆண்டுகளில் சௌ நின் 10க்கு அதிகமான நாவல்களை எழுதி வெளியிட்டார். அவருடைய படைப்புகள் வாசகர்களிடையில் எதிரொலிப்பை ஏற்படுத்தியுள்ளதன.
41 வயதான சௌ நின் பெய்ஜிங்கில் பிறந்தார். 1998ல் அவர் ஆசிரியர் பணியிலிருந்து விலகி, இலக்கிய படைப்பில் ஈடுபடலானார். 2001ல் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பாவை எனும் நீண்ட நாவலினால், அவர் பெயர் பெற்றால்.
மொ மின் எனும் கணினித்துறையில் பயிலும் பல்களைக்கழக மாணவி, வரட்டுத்தனமான படிப்பு வாழ்க்கை குறித்து, மனநிறைவின்மை பெற்றார். இதனால் அவர், ஏற்கனவே திருமணமான லௌ பு என்பாருடன் கூடி வாழ்வது பற்றி இந்நாவல் வர்ணிக்கின்றது. ஒரு புறம் கதாநாயகி சமூகம் ஏற்றுக்கொண்ட ஒழுக்கநெறியினால் தன்னைத் தானே குறை கூறுகிறார். மறு புறம், காதல் கடலில் மூழ்கி தன்னைத் தானே காப்பாற்ற முடியாமல் தத்தளிக்கிறார். இந்நாவலில், நான் என்ற வடிவத்தில் கதையை வர்ணிக்கின்றது. இதில் பெரும்வாரியான உள வர்ணனையானது, கதாநாயகியின் ஆத்மா அழிவின் வளர்ச்சிப் போக்கை வாசகர் முன்னிலையில் வெளிப்படுத்தியதாக திறனாய்வாளர் கருதுகின்றனர்.
அதே ஆண்டு, "குளிர்ந்த உதடு", "செவ்வண்ணப் பசை சாம்ராஜியம்", "நறுமணம் வீசும் உடல்" உள்ளிட்ட பல நாவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
1 2 3
|