சௌ நின்னின் நாவல் இன்றைய சீனாவின் நகர வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு, விதம் விதமான நபர்களின் வாழ்வு நிலையை வர்ணிக்கின்றது. இதன் மூலம் நகர் வாழ் மக்களின் மறைமுகமான ஆவலையும் சமூகத்திலான நபர்களின் சிக்கல் தன்மையையும் வெளிக்காட்ட அவர் முயல்கிறார். அவருடைய நாவல்களில் பெரும்பாலும் மகளிர் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றனர். ஆடவரோ, சார்பு நிலையில் உள்ளனர். மகளிர் மணம் கமழும் எழுத்தாளர் என அவர் கருதப்படுகிறார். இது பற்றி அவர் கூறியதாவது—
"என் படைப்புகளில் மகளிர் மைய நபராக விளங்குகின்றனர். சுற்றுப்புறத்தில் ஆடவர் சூழ்ந்திருக்கின்றனர். என்னுடைய உலகம் ஆடவரினால் ஏற்படுவது அல்ல."
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று, முதுபெரும் எழுத்தாளர் வலியுறுத்துகின்றனர். இதற்கு மாறாக, வாழ்க்கையை அனுபவிப்பது என்பது ஒரு எழுத்தாளரைப் பொறுத்த வரை, முக்கியமானது அல்ல என்று சௌ நின் கருதுகிறார். நாவல் என்றால் சாராம்ச ரீதியில் ஒரு படைப்பு என்பது அவருடைய கருத்து. அதுவும், அது எழுத்துக்களின் பரவலாக அல்லாமல், ஒரு கற்பனை உலகைப் படைக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். கடந்த 2, 3 ஆண்டுகளில் தாம் எழுதிய 10க்கும் அதிகமான நாவல்கள் அனைத்தும் கற்பனை ஆற்றலினால் நிறைவேறியுள்ளதாக அவர் கூறினார். ஏனெனில் ஒரு தலைசிறந்த நாவல் ஆசிரியராக மாற வேண்டுமானால், அவர் கற்பனை ஆற்றல் மிக்க நாவல் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். எனவே தமது கற்பனை ஆற்றல் குறித்து அவர் பெரிதும் பெருமைப்படுகிறார். அவர் கூறியதாவது—
"வாழ்க்கை என்றால், அது அனுபவிக்கப்பட்டே தீர வேண்டும் என்பதல்ல என்று நான் கருதுகிறேன். ஒரு பெண் எழுத்தாளர் என்ற வகையில், ஆர்வமிக்க மகளிர் நான், ஒரு இயல்பான மகளிர். நான் உணர்ந்ததை என் நாவலில் பயன்படுத்துகிறேன். எடுத்துக்காட்டாக, நான் மேற்கோள்களை அல்லாமல் விவரங்களைத் தான் குறிப்பு எழுதி, என் வாழ்க்கையிலுள்ள ஒவ்வொரு துணுக்கையும் எழுதிக்கொள்வது உண்டு."
1 2 3
|