• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-23 14:35:41    
எழுத்தாளர் சௌ நின் அம்மையார்

cri

"இரவின் அலங்காரம்" எனும் அவருடைய நாவல், கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் நிகழ்ந்த சார்ஸ் நோயைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்த எதிர்பாராத பெரும் நாசகரமான நிலைமையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியை வழங்கும் கதாநாயகி சியௌ யியின் உணர்வு மற்றும் காதல் அனுபவத்தை, இந்நாவல் வருணிக்கின்றது. அத்துடன், சமூகத்திலுள்ள விதம் விதமான நபர்களின் தோற்றத்தையும் வாசகருக்கு வெளிப்படுத்துகின்றது.

அவருடைய இதர படைப்புகள் போலவே, இந்நாவலும் பாராட்டு பெறும் அதே வேளையில், சர்ச்சைக்கும் உள்ளாயிற்று. நறுமணம் வீசும் உடல், குளரிந்த உதடு முதலான நாவல்கள் போல், அவர் வேண்டுமென்றே இந்நாவலும்க்கு குறிப்பிட்டதோர் மறைமுகமான பால் எச்சரிக்கையை வழங்குகிறார். வாசகரின் தேவையை நிரப்பி அலங்கார வார்த்தைகளுடன் முகஸ்துதி பாட முயல்வது என்பது, அவருடைய நோக்கமாகும் என்று சிலர் கருதுகின்றனர். ஓராண்டில் சௌ நின் 6, 7 நாவல்களை வெளியிடுவது என்பது, இலக்கியப் படைப்பின் மீது அவர் கொண்டிருக்கும் கண்டிப்பான தன்மையின் மீது சில திறனாய்வாளர் ஐயப்படுகின்றனர். இது குறித்து சௌ நின் கூறியதாவது—

"முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபடும் போது, உங்கள் உயிரின் ஒரு பகுதி உங்கள் படைப்புடன் உலா போகும் என்று, சில வேளையில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நாவல் எழுதும் போக்கில் உள்ளத்தின் எண்ணத்தை உற்றுப்பார்க்கிறீர்கள். சாதாரண நாட்களில் காணாததை நீங்கள் அப்போது காணலாம்."

எழுத்தாளர் என்ற முறையில், சர்ச்சையை உருவாக்குவதற்குத் தாம் பயப்படவில்லை என்று அவர் கூறுகிறார். சீனாவின் தலைசிறந்த எழுத்தாளர் என்று கூறும் அளவுக்கு அவர் சென்றார். குறிப்பாக, மார்பு மூலம் எழுதுவதாக அவர் பறைசாற்றியமை, பொது மக்களிடையில் பெரும் கூச்சல் எழுப்பியுள்ளது. மார்பு மூலம் எழுதுவது என்றால் முழு ஆர்வத்தையும் நிகழ்ச்சிகள் மீதான மகளிரின் கூருணர்வையும் கொண்டு நாவல் எழுதுவதென்று பொருள் என அவர் எடுத்துரைத்த போதிலும், இக்கூற்று நாகரியமற்றதாக இருக்கிறது என்று திறநாய்வாளர் கருதுகின்றனர். ஆனால் சௌ நின், இது பற்றிக் கவலைப்படவில்லை.


1  2  3