• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-02 15:40:51    
தொன்மை வாய்ந்த சுசோ பூங்கா

cri

கிழக்கு சீனாவில் சுமார் 2500ஆண்டு வரலாறுடைய பிரபல பண்பாட்டு நகரம் ஒன்று உள்ளது. மனித குலத்தின் தேவலோகமென சீன மக்களால் அழைக்கப்படும் சுசோ நகரம் தான் அது. தொன்மை வாய்ந்த பூங்கா, இந்நகரின் தனிச்சிறப்பியல்பாகும். இந்நகரில் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள 60க்கும் அதிகமான பழங்கால பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 9, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது நேயர்களுடன் இணைந்து இந்நகரைப் பார்வையிடுகின்றோம். பழங்கால சுசோ நகரம் கி.மு. 514ல் உருவாயிற்று.

கடந்த 2500 ஆண்டுக் காலத்தில் எண்ணற்ற போர்களும் இயற்கைச் சீற்றங்களும் நிகழ்ந்த போதிலும், இது வரையிலும் அது பாதிக்கப்படவில்லை. பழைய நகரப்பகுதியில், நீர் வழிப் போக்குவரத்தும் தரைப்பாதைப் போக்குவரத்தும் இணைந்து பயன்படுத்தப்படுவதும் ஆறும் வீதியும் இணைந்திருப்பதுமான நகரப் பரவல் நிலைமை அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. யாங்சி ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள சுசோ நகரில் விளை நிலம் வளம் மிக்கது. கால நிலை பரவாயில்லை. போக்குவரத்து வசதியானது. கி.பி, 400ஆம் ஆண்டிலான நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில், பணியிலிருந்து விலகி ஓய்வு பெற்ற சீன அதிகாரிகளில் பலர், தமது முதுமைக் காலத்தைக் கழிக்க இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்துப் பூங்கா அமைத்தனர்.
1  2  3