
அதன் மூலமும், மலர் மற்றும் மர வளர்ப்பு மூலமும் கவிதை, ஓவியம் ஆகியவை தழுவிய காட்சி தோன்றுமாற செய்தனர். இதனால், சுசோவிலுள்ள தொன்மை வாய்ந்த பூங்கா, ஓசை இல்லாத கவிதை, கன வடிவ ஓவியம் என அழைக்கப்படுகின்றது. பூங்காவில் உலா வரும் போது, கவிதை பாடுவது, ஓவியம் கண்டுகளிப்பது போல தோன்றுகிறது. சுசோ நகரில், தொன்மை வாய்ந்த பூங்காக்களை உருவாக்குவதென்ற உருவரைவுக் கருத்தை உலகப் பண்பாட்டு மரபுச் செல்வக் கமிட்டி புகழ்ந்து பாராட்டியுள்ளது. 1997ஆம் ஆண்டு, சுசோ நகரின் சுவொசன் பூங்கா, வான்ஸ் பூங்கா, லியூ பூங்கா, சிங்கப் பூங்கா ஆகியவை, உலகப் பிரபல பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. பின்னர், சாங்லொங் கூடார மண்டபம் உள்ளிட்ட 5 பூங்காக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 1 2 3
|