
சீனாவின் மிங்-சிங் வமிச ஆட்சிக் காலத்தில் சுசோ நகரின் பூங்கா கட்டமைப்பின் கலை மேலும் பக்குவப்பட்டு, பூங்கா கட்டடக் கலைஞர் பலர் மட்டுமல்ல, சிறந்த பூங்காக் கட்டடங்களும் தோன்றின. சுசோ நகரிலுள்ள பழங்கால பூங்காக்களில் பல, தனியார் பூங்காவாகும். அதன் பரப்பளவு குறைவு. இருப்பினும், எல்லைக்குட்பட்ட இடத்தில் பூங்கா நிறுவியோர் செயற்கைக் குன்றை உருவாக்கி, மரம் வளர்த்து, கூடார மண்டபங்களைக் கட்டியமைத்து, குளம் உண்டாக்கி, பாலம் அமைத்தனர் என்று சுசோ நகரப் பூங்காப் பணியகத்தின் தலைவர் சியுவன்தாவ் அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறுகின்றார், இப்பழங்காலப் பூங்காக்களில் ஒரு பகுதி இருப்பிடம். மற்றொரு பகுதி பூங்கா. இருப்பிடமானது, தென் கிழக்குச் சீனாவின் பண்டைக் காலக் கட்டடத்தில் முக்கியமானதொரு சிறந்த பகுதியாகும். பூங்காவானது, மனிதரும் இயற்கையும் சுமுகமாக இருப்பதற்கு முன் மாதிரியாகும். 4 பருவ காலங்களில், இப்பூங்காவின் காட்சி வேறுபடுகின்றது. இப்பூங்காவில் வாழ்வோர், 4 பருவ காலங்களின் வேறுபாட்டையும் இயற்கை காட்சியையும் உணரலாம் என்றார் அவர். பண்டைக் காலத்தில் சீனாவில் பூங்காவை நிறுவியோர், பண்பாட்டு அறிவு மிக்கவர். அவர்கள், கவிதை இயற்றுவதிலும் ஓவியம் தீட்டுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள், பூங்காவை உருவாக்கிய போது ஓவியத்தை அடிப்படையாகவும் கவிதையைக் கருப்பொருளாகவும் கொண்டு, குளத்தையும் குன்றையும் உருவாக்கினர். 1 2 3
|