• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-09 11:40:22    
சுசோ நகரம்

cri
 
 
கடந்த முறையில் தொன்மை வாய்ந்த சுசோ நகரம் பற்றி அறிமுகப்படுத்தினோம். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?சீனாவுக்கு வருகை தந்து சுசோ நகரில் சுற்றுலா மேற்கொள்ள ஆசைப்படுகிறீர்களா?இந்நகரம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?இது தொடர்பான கருத்தைக் கடிதம் மூலம் அல்லது சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் மூலம் தெரிவிக்கலாம் அல்லவா?வாய்ப்பு கிடைக்கும் போது சீனாவுக்கு வந்து தொன்மை வாய்ந்த சுசோ நகரில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்போது, தொன்மை வாய்ந்த சுசோ நகரம் பற்றி தொடர்ந்து அறிமுகப்படுத்துகின்றோம்.

சுசோ நகரின் தென் கிழக்கில் அமைந்துள்ள வான்ஸ் பூங்காவின் பரப்பளவு ஒரு ஹெக்டர் கூட இல்லை. எனினும், தலைசிறந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சுசோ நகருக்கு வருகை தரும் பயணிகளில் பலர், வான்ஸ் பூங்காவைப் பார்வையிடவும், சுசோ பூங்காவின் தனிச்சிறப்பை உணரவும் விரும்புகின்றனர். இரவில், வருகை தந்தால், இப்பூங்காவின் அழகிய காட்சியை மட்டுமல்ல, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம்.
1  2  3