
இது, மேலும் சிறப்பானது. முன்புறத்தில் விருந்தினர் அறை, பின் பக்கத்தில் உரிமையாளரின் உறைவிடம் என்பது, வான்ஸ் பூங்கா கட்டிடத்தின் தனிச்சிறப்பியல்பாகும் என்று வழிகாட்டி சென்ஜின் கூறினார். பூங்காவில் உள்ள மலர்கள் நறு மணம் வீசுகின்றன. தொன்மை வாய்ந்த இனிமையான இசை காதில் விழுகின்றது. அழகான இயற்கை காட்சி கண்ணுக்கு விருந்து அளிக்கிறது. பூங்காவிலுள்ள புல், மலர், மரம், மலை, கல், செங்கல் ஓடு ஆகிய அனைத்தும், உயிரோட்டத்துடன் காணப்படுகின்றன.

இளம் ஆஸ்திரேலிய ஆசிரியர் கிளென் பின்ச் கூறுகிறார், இவ்விடம், எழில் மிக்க இடம் என்பது உண்மை. பொழுதுபோக்கிற்குத் தகுந்த இடமும் ஆகும். இவ்வளவு அழகான சுற்றுச்சூழலில் சீனப் பண்பாட்டில் மறைந்திருக்கும் பழமை வாய்ந்த வரலாற்றை ஆழமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி என்றார் அவர். தாமஸ் எனும் அமெரிக்கர் சுசோவுக்கு வருகை தருவது இதுவே 3வது முறையாகும். ஒவ்வொரு முறையிலும் சுசோ பூங்காவைப் பார்வையிடும் போது, வேறுபட்ட உணர்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். 1 2 3
|