
இங்குள்ள பூங்கா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அமைதியாக உள்ளது. குறிப்பாக, காதில் விழும் சீனாவின் பண்டைக்கால இசை இனிமையானது. இதுவே நான் தேடிவரும் பாரம்பரிய சீனப் பண்பாடு என்று கருதுகின்றேன். தேட வேண்டியவற்றை எல்லாம் இங்கு கண்டறியலாம் என்றார் அவர். சுசோ பண்டைக் கால பூங்கா மீதான உலக மரபுச்செல்வக் கமிட்டியின் மதிப்பீட்டை அவர்களுடைய கூற்று ஓரளவில் வெளிப்படுத்தியுள்ளது. 16வது நூற்றாண்டு முதல் 18வது நூற்றாண்டு வரை கட்டியமைக்கப்பட்ட இப்பூங்கா, அதன் நுணுக்கமான உருவரைவின் மூலம், சீனப் பண்பாட்டில் நிலவும் இயற்கையிலிருந்து வந்து, இயற்கையைத் தாண்டும் சூழ்நிலை தென்படுகின்றது.
சுசோ நகரம் பற்றி உங்கள் கருத்து என்ன?எங்களுக்குத் தெரிவியுங்கள். இது போன்ற கட்டுரையை அறிய விரும்புகிறீர்களா?நிச்சயம் விரும்புகிறீர்கள் என்று நம்புகின்றோம். 1 2 3
|