வட மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப்பிரதேசத்தின் தெற்கிலுள்ள தாக்லமான் பாலைவனத்தின் மைய பகுதியில், பசுமையான இரண்டு தாவர நாடாக்கள், பசுமை ஊடுவழிகள் போல், ஒரு கறுப்பு தார் வழியை பாதுகாக்கின்றன. உலகில், நடமாட்ட மணலுக்கூடாகச் செல்லும் மிக நீளமான நெடுஞ்சாலை, இதுவாகும். இன்றைய நிகழ்ச்சியில் இந்நெடுஞ்சாலையின் கட்டுமானமும் பராமரிப்பும் பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
தாக்லமான் பாலைவனம், தெற்கு சிங்கியாங்கின் ஒரு வடிநிலத்தின் மத்தியில் அமைந்துள்ளது. அதன் 3 லட்சத்து 30 ஆயிரம் சதுரகிலோமீட்டர், பரப்பில் 80 விழுக்காட்டுக்கு மேல், நடமாட்ட மணலாகும். இது சீனாவில் மிகப்பெரிய பாலைவனம். அன்றி, உலகில் இரண்டாவது பெரிய நடமாட்ட பாலைவனமுமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக, தெற்கு வடக்கு போக்குவரத்துக்கும், கிழக்கு-மேற்கு தொடர்புக்கும் இப்பாலைவனம் தடையாக இருந்தது. வணிகக்குழு, ஓட்டகக்குழு, ஆய்வு பயண நிபுணர் ஆகியோர், தாக்லமான் பாலைவனத்தில் பாதை ஒன்றை கண்டறிய முயற்சி செய்தாலும் தோல்வியடைந்தனர்.
1 2 3
|