1990ம் ஆண்டுகளில் பாலைவனத்தின் மையப்பகுதியிலுள்ள எண்ணெய் இயற்கை வாயு மூலவனத்தை தோண்டி எடுக்கும் வகையில், பெரும்தொகையுடன் தொடர்புடைய வாரியம், தாக்லமான் பாலைவனத்துக்கு குறுக்கே செல்லும் நெடுஞ்சாலையைக் கட்டியமைக்கத்துவங்கியது. 1995ம் ஆண்டில், இந்நெடுஞ்சாலை கட்டிமுடிக்கப்பட்டு போக்குவரத்தில் இறங்கியது. சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சிங்கியாங் உயிரின வாழ்க்கைச் சூழல் மற்றும் புவிநிலை ஆய்வகத்தின் ஆய்வாளர் செங் சிங் வேன் இந்நெடுஞ்சாலையின் கட்டுமானத்தில் அனுபவம் பெற்றுள்ளார். அவர் கூறியதாவது:
"இந்நெடுஞ்சாலையின் முழு நீளம், 562 கிலோமீட்டர் ஆகும். அவற்றில் 443 கிலோமீட்டர் பரப்பு, நடமாட்ட மணல் பகுதியாகும். அது கட்டியமைக்கப்பட்டமை, தெற்கு சிங்கியாங் பொருளாதார வளர்ச்சியை பயன்தரும் முறையில் முன்னேற்றுவித்துள்ளது. எண்ணெய் வயல் அகழ்வை விரைவுபடுத்தியுள்ளது" என்றார் அவர்.
1 2 3
|