மாபெரும் பொருளாதார பயனை வெளிக்கொணரும் அதே வேளையில் நெடுஞ்சாலையின் பாதுகாப்புப் பிரச்சினையும் நிலவுகின்றது. பாலைவனத்தின் மையப்பகுதியில் ஓராண்டின் ஏற்குறைய 60 நாட்களில் கடும் காற்று வீசும். இக்காற்று வீசுவதுடன், நெடுஞ்சாலையில் மணல் மேன்மேலும் குவிந்து கிடந்தது. அதனைக் கட்டுப்படுத்துவதும் சிரமம். சீன அறிவியல் கழகத்தின் நிபுணர் முன்வைத்த முன்மொழிவின் போல், உயிரின மணல் தடுப்பு முறைமை என்ற திட்டப்பணி, நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் வரைக்கூடிய புதர், புல்செடி முதலியவற்றை பயிரிட்டு வன காப்பு நாடாவை உருவாக்குவது என்பது இத்திட்டப்பணியின் பொருளாகும்.
மூன்று ஆண்டுகள் உருண்டோடின. எத்தகைய தாவரங்களைப்பயிரிடுவது, எவ்வாறு நீர்ப்பாசமை செய்வது முதலியவற்றில் ஆய்வாளர் அனுபவங்களைப் பெற்றுள்ளனர். 1 2 3
|