
சீனாவில், தென்னாசிய மொழித் தொகுதியைச் சேர்ந்த மொழியைப் பயன்படுத்தும் சில தேசிய இனங்களில், வாவ் இனம் ஒன்றாகும். 4 லட்சம் மக்கள் தொகையுடைய வாவ் இனம், முக்கியமாக தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் வாழ்கின்றது. சொந்த இனத்தின் மொழி மூலம் தனது தேசிய இனப் பண்பாட்டைப் பரவல் செய்வதினால், இவ்வனத்தவர் மிகவும் தற்பெருமைப்படுகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், ஐ சிங். சி யேன் எனும் வாவ் இன இளைஞரை அறிமுகப்படுத்துகின்றோம்.

அவர்தம் குடும்பம், யுன்னான் மாநிலத்து சாங் யுன் வாவ் இனத்தன்னாட்சி மாவட்டத்தில் உள்ளது. உள்ளூர் கிராமத்தில் முதன்முதலாகப் பல்வகைக் கழகத்தில் சேர்ந்த பெருமை அவருக்கு உண்டு. தம் படிப்பு பற்றி அவர் கூறியதாவது: "நான், வாவ் இன விவசாயியின் மகன். எங்கள் கிராமத்துக்காக முதலானது பல்கலைக்கழக மாணவராக வேண்டும்" என்ற விருப்பம், சிறு வயதிலிருந்தே எனக்கு உண்டு" என்றார், அவர்.
1 2 3
|