
குடும்பத்தில் அவர், மூத்த மகன். இரு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர். அப்போது, அவரது ஊர், ஒரு வறிய கிராமம். ஐ சிங் குடும்பம் வளமானது அல்ல. கிராமவாசிகளின் கல்வியறிவு குறைவு என்பது, இவ்வறிய, பின்தங்கிய நிலைமைக்குக் காரணமாகும் என்று அவர் உணர்ந்து கொண்டார். எனவே, நன்றாகப் படிக்க வேண்டும் என அவர் உறுதி பூண்டார்.
எனவே, தாம் விரும்பியவாறு, யுன்னான் தேசிய இனக் கல்லூரியில் சேர்ந்து, கிராமத்தின் முதலாவது பல்கலைக்கழக மாணவரானார். அவர், கண்ட கனவு நிறைவேறியது.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்த போது, பெரிய நகரத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்பைக் கைவிட்டு, சொந்த ஊரான சாங் யுன் அ வாவ் மலைப் பிரதேசத்துக்குத் திரும்பினார். தான் பெற்ற கல்வியினால், ஊரின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும் என்று, உறுதி பூண்டார். சாங் யுன் மாவட்டத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியகத்தில் அவர் பணியில் அவர்த்தப்பட்டார். வாவ் மொழியில் வானொலி நிகழ்ச்சியைத் துவக்கி வைப்பதற்குப் பொறுப்பேற்றார்.
1 2 3
|