
பணியாளர் குறைவு என்பதினால், மொழிபெயர்ப்பில் ஈடுபடும் அதே வேலையில் அறிவிப்பாளராகவும் அவர் இருக்கின்றார். அவர்தம் பொறுப்பில் உள்ள வாவ் மொழி நிகழ்ச்சி, உள்ளூரில் வாவ் மொழி பேசப்படும் பெரும்பாலான இடங்களில் கேட்க முடிகின்றது. நிகழ்ச்சிகள் செவ்வனே அமையும் வகையில், அவர் நாள்தோறும், தலைநகரான பெய்சிங் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளைக் கேட்டும் பார்த்தும் அவற்றை வாவ் மொழியில் பெயர்ந்து, வாவ் மலைப்பிரதேசத்தில் வாழ்வோருக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் அறிவிப்பார். இதன் மூலம், கிராமவாசிகள், உரிய நேரத்தில் உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகளை அறிய முடிகிறது. இத்தகைய பணி, கடிமை ஆனது; களைப்பு தருவது; இருப்பினும், ஒரு நாள் கூட நிறுத்தியதில்லை என்கிறார் ஐ. சிங். சி யென்.

"வானொலி மூலம், வாவ் மொழியை பரவல் செய்ய விரும்புகின்றேன், நாட்டின் கொள்கை, தேசிய இன நடையுடை பாவனை, தேசிய இனப் பண்பாடு ஆகியவற்றை பிரச்சாரம் செய்வேன். வானொலி நிகழ்ச்சிகள் மூலம், வாவ் இனப் பண்பாட்டை வலுப்படுத்தி நிலைநிறுத்த விரும்புகின்றேன்" என்றார், அவர். 1 2 3
|