வன காப்பு நாடா கட்டியமைக்கப்பட்டமை, நடமாட்ட மணலால் உருவான தீங்கை அடிப்படையில் கட்டுப்படுத்தி, பாலைவன நெடுஞ்சாலையின் பாதுகாப்பான செயல்பாட்டினை உத்தரவாதம் செய்ய முடியும் என்று இத்திட்டப்பணிக்குப் பொறுப்பான மா செங் வூ எடுத்துக்கூறினார். தற்போது நீர்ப்பாசமை என்பது, திட்டப்பணியின் கட்டுமானத்தில் மிகப்பெரிய இன்னலாகும். இப்பிரச்சினையைத் தீர்க்க, நிர்மணிப்போர், நெடுஞ்சாலையின் நெடுங்கிலும் 114 கிணறுகளைத் துளைத்து செய்தனர். மின்னாக்கி, நீர்பம்பு மற்றும் நீர் விநியோகத் தொகுதியை பொருத்தினர். இதற்கென, இஸ்ரேலில் தயாரான நீர்ப்பாசன வசதிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இருபதாயிரம் கிலோமீட்டர் நீளமான குழாய் போடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தாவரத்துக்குத் தேவைப்படும் நீர்ப் பிரச்சினை வேரோடு தீர்க்கப்பட்டு விட்டது என்று மா செங் வூ கூறினார்.
திட்டப்பணியின் வேகத்தை விரைவுபடுத்தி, அடுத்த ஆண்டின் ஏப்ரல் திங்களில் பாலைவனத்தின் இரு பக்கங்களிலும் பச்சை பசேர் என பசுமையாக்கப் பாடுபடுவோம் என்றார் அவர்.
பாலைவன நெடுஞ்சாலையின் வன காப்பு நாடா கட்டிமுடிக்கப்பட்டதினால், தாக்லமான் பாலைவனத்தில் உயிர்த்துடிப்பு நிறையக் காணப்படும். அதே வேளையில், பாலைவன நெடுஞ்சாலையின் நெடுங்கில் தரிசு நிலையை இது முற்றாக மாற்றி விடும் என்றார் அவர். 1 2 3
|