சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஜியாங் சு மாநிலத்தில் அமைந்துள்ள ஹுவா சி கிராமம், சீனாவின் முதலாவது கிராமம் என புகழ் பெற்றது. விறுவிறுப்பான உயிராற்றல், உயர் வேக பொருளாதார அதிகரிப்பு ஆகியவற்றால், இக்கிராமம் மற்ற கிராமங்களைக் காட்டிலும், வெகுவாக முன்னணியில் இருக்கிறது. இதனால் தான் ஹுவா சி கிராமம் பிரபலமாக மாறிவிட்டது. புதிய நூற்றாண்டில் அடி எடுத்து வைத்த பின், வளமடைந்த இக்கிராமம் புதிய வளர்ச்சி குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. மேலதிக அண்டை கிராமங்களை பொருளாதாரம் வளர்ச்சியுறுவது வாழ்க்கை வளமடைவது என்ற பாதைக்கு வழிகோலுவது என்பது அதன் குறிக்கோளாகும்.
ஹுவா சி கிராமம், உயர் நிலை நகர குடியிருப்பு பிரதேசம் போல் காணப்படுகிறது. ஒரு நகர்ப்புற மனைக்கு முன், செய்தியாளர் வூ அம்மையாருடன் உரையாடினார். தம் மனைக்கு 3 மாடிகள் உண்டு. பரப்பளவு 600 சதுர மீட்டராகும். மனைக்கு முன் நீச்சல் குளமும், பின் கார் நிறுத்தும் இடமும் உண்டு என்று வூ கூறினார்.
1 2 3
|