"எங்கள் குடும்பத்தில் 4 பேர் உள்ளனர். நாங்கள் தம்பதி இருவருக்கும் 2 குழந்தைகள் உண்டு. வீட்டை வாங்கும் பணத்தைச் செலுத்தி விட்டோம். இன்னும் பல பத்து லட்சம் யுவான் சேமிப்பு தொகை உண்டு. எங்களுக்கு 3 கார்கள் உண்டு. முன்னர் கார் நிறுத்தும் இடத்தில் 2 மிதிவண்டிகள் நிறுத்தும். இப்போது அங்கு 2 கார்கள் உள்ளன. ஏனைய ஒரு கார் வெளியே நிறுத்த வேணிடியிருக்கிறது" என்றார் அவர்.
ஹுவா சி கிராமம் தென் சீனாவின் நீரூரில் அமைந்துள்ளது. இங்கு மண் வளமிக்கது என்ற போதிலும், நிலம் குறைவு. மக்கள் அதிகம். வூ ரென் பாவ் எனும் வழிகாட்டடியின் தலைமையில் தான் இப்படிப்பட்ட இன்பமான வாழ்க்கையை தாம் அனுபவித்துள்ளதாக வூ அம்மையார் கூறினார். வூ ரென் பாவ், உள்ளூரில் பிறந்து வளர்ந்த விவசாயி ஆவார். அவர் விசாலமான கண்பார்வையுடையவர், துணிச்சல் மிக்கவர். கடந்த நூற்றாண்டின் 60, 70 ஆண்டுகளில், கிராம தொழில் துறையை அவர் முதலில் நடத்தினார். உருக்கு உருக்கும் தொழில், நெசவு தொழில், ஆடை தொழில், கட்டுமான தொழில் முதலிய தொழில் நிறுவனங்களை அவர் நடத்தினார். இந்தத் தொழில் துறைகள் ஹுவா சி கிராமத்தை வளப்படுத்தியுள்ளன. மக்களின் வாழ்க்கை இதனால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வளர்ந்து வந்துள்ளது.
1 2 3
|