
வாவ் இன மக்களின் விரும்பத்துக்கிணங்க, நிகழ்ச்சிகளை நடத்தும் பொருட்டு, தமது சகாக்களுடன் இணைந்து, "எல்லைப்பிரதேச நடையுடை பாவனை" எனும் கலை நிகழ்ச்சியை துவக்கினார். வாவ் இன நேயர் இயற்றிய கவிதைகள், புதினங்கள் முதலியவற்றை சிறப்பாக பதிப்பித்து வெளியிடுகின்றனர். இதனால், உள்ளூர் இலக்கிய பிரியர்களின் உற்சாகம், ஓங்கி வளர்ந்துள்ளது; கட்டுரைகளை அவர்கள் எழுதி வருகின்றனர். ஐ சிங்கின் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் வளமுடைந்துள்ளது.

பணியில் சிறந்த சாதனை ஈட்டித்தந்த காரணத்தால், சாங்யுன் மாவட்டத்து அ வாவ் செய்தி நிறுவனத்துக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். முன்பு, இச்செய்தித்தாள் நாள்தோறும் இரு முறை மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால், ஐ சிங்கின் வருகையினால், பணி படிப்படியாக முறையாகி வருகின்றது.
1 2 3
|