
"நான் இச்செய்தித்தாளை மிகவும் விரும்புகின்றேன். வாவ் மலைப் பிரதேசம் பற்றிப் பிரச்சாரம் செய்யும் முக்கிய சன்னலாக இது திகழ்கின்றது. அங்குள்ள பண்பாடு, அரசியல், பொருளாதாரம் முதலியவற்றை, இச்செய்தித்தாள் படிப்பதன் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்" என்றார், அவர்.

இருப்பினும், பணியில் இன்னல் பலவற்றை ஐ. சிங் சந்தித்தார். சாங் யுன் மாவட்டத்தில், செய்தித்தாள் அச்சுடிக்க வசதி இல்லை. எனவே, வாரந்தோறும், 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில், அச்சடிக்கச்செய்ய அவர் ஏற்பாடு செய்கிறார். பின்னர், அவற்றை பல்வேறு வாரியங்களுக்கு விநியோக்கிறார். இத்தகைய பணி, கடினம் என்ற போதிலும், ஐ. சிங் தளர்ந்து விடாமல், அயராது உழைத்து வருகிறார். 1 2 3
|