ஹா மி முலாம்பழம், சிங்கியாங்கில் மட்டும் வளரும் முலாம் பழமாகும். இலையுதிர்காலத்தில், ஹா மி முலாம்பழம் பக்குவமடையும் போது, சிங்கியாங் எங்கும், இம்முலாம்பழத்தின் வாசனை வீசுகின்றது. வாசனையோடு, இதை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வதில் ஒருவர் மூழ்கி விடுவார்.
சிங்கியாங்கில் ஹா மி முலாம்பழம் பயிரிடும் வரலாறு, ஆயிரம் ஆண்டு உடையது. கிழக்கு சிங்கியாங்கின் து லு பாங் பிரதேசத்தின் சாங் சங் மாவட்டம், ஹா மி முலாம்பழத்தின் ஊராகும். இங்கு விளையும் ஹா மி முலாம்பழம், சாப்பிடுவதற்கு இனிப்பானது. சுவைமிக்கது. ஆகையால், வசந்தகாலத்தில் இம்மாவட்ட வீவசாயிகள் பயிரிடும் ஹா மி முலாம்பழ செடியிலிருந்து முளை வளரும் போதே, சீனாவின் பல்வேறு இடத்து பழ வணிகர்களால் ஆடர்செய்யப்பட்டு விடும்.
1 2 3
|