முன்பு, இப்பழம், சிங்கியாங்கின் உள்ளூர் அதிகாரிகள், பேரரசருக்கு அன்பளிப்பு செய்யும் பழமாகும். சிற்சிலா மட்டும் அதனை உட்கொள்ள முடியும். இன்று, சீனாவின் வெவ்வேறான இடங்களிலும் இதை வாங்கலாம். இது மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, தென்கிழக்காசியாவின் சில நாடுகள் ஆகியவற்றுக்கும் ஏற்றுமதியாகின்றது. குவாங் துங் டு சிங் பண்ணை வரைநிலை கூட்டு நிறுவனம், பழ மற்றும் காய்கறி பயிரிடுதல், பதனீடு, ஏற்றுமதி ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்கும் ஒரு தொழில் நிறுவனமாகும். ஆண்டுதோறும், சிங்கியாங்கிலிருந்து பல நூறு டன் எடையுடைய ஹாங் மி முலாம்பழத்தை ஆடர்செய்கின்றது. பின்னர், நெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இக்கூட்டு நிறுவனத்தின் மேலாளர் கெ போ, செய்திமுகவருக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
ஹா மி பிரதேசத்தின் உள்ளூர் வேளாண் ஆக்கப்பொருள் தொழில் நிறுவனத்துடன் ஒத்துழைத்து, ஹாங் மி முலாம்பழம், பேரீச்சம் பழம் முதலியவற்றை எங்கள் கூட்டு நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டுச் சந்தைப் படுத்த எங்கள் கூட்டு நிறுவனம் மிகவும் விரும்புகின்றோம் என்றார், அவர். 1 2 3
|