
இவ்வாண்டு, சீன-பிரெஞ்சு பண்பாட்டு ஆண்டாகும். அண்மையில், பிரான்சில், சீனப்பண்பாட்டு ஆண்டு எனும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டது. இதில், சீனத் தேசிய இன ஆடை கண்காட்சி, பிரான்சு நாட்டவர்களில் பரபரப்பை எழுப்பியுள்ளது. செம்மையான எழில்மிக்க சீனத் தேசிய இன ஆடைகளால் அவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதே வேளையில், சீனாவின் தேசிய இனப் பண்பாட்டிலும் அக்கறை கொண்டுள்ளனர். பின்னர், பிரான்சும், சீனாவில் பண்பாட்டு ஆண்டு எனும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பிரெஞ்சு பண்பாட்டின் வசீகரத்தை சீன மக்கள் நேரடியாக உணர்ந்து கொள்வதற்கு இந்நடவடிக்கை துணை புரியும்.

சீனாவின் மஞ்சு இனத்தின் அரண்மனை இசை புகழ் பெற்றது. இசை ஒலியுடன் Qipao எனும் சீன பாணியுடைய நீண்ட சட்டை அணியும் சில செல்விகள், கீழை நாட்டு பெண்மணியின் அழகை வெளிப்படுத்துகின்றனர். அவர்களில் சிலர், மஞ்சு இனத்தின் பாரம்பரியமுடைய பெரிய Qipao அணிகின்றனர். தலையில் செம்மையான அழகான அலங்காரம் அணிகின்றனர். வேறு சிலர், புதிய ரக Qipao அணிகின்றனர். சீன Qipao இன் வசீகரத்தில் பிரெஞ்சு பார்வையாளர் மூழ்கி தினைக்கின்றனர். பிரான்சில் நடைபெற்ற சீனப்பண்பாட்டு ஆண்டு எனும் நடவடிக்கையில் இது காணப்பட்டது.
1 2 3
|