
கடந்த முறையில் தாலி காட்சித் தலம் பற்றி அறிமுகப்படுத்தினோம். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன? சீனாவுக்கு வருகை தந்து இவ்விடத்தில் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகிறீர்களா?இக்காட்சி தலம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீகள் என்று நான் நம்புகின்றேன். இது தொடர்பான கருத்தைக் கடிதம் மூலம் அல்லது சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் மூலம் தெரிவிக்கலாம் அல்லவா?வாய்ப்பு கிடைக்கும் போது சீனாவுக்கு வந்து தாலி காட்சித் தலத்தில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இப்போது, தாலி நகரம் பற்றி தொடர்ந்து அறிமுகப்படுத்துகின்றேன்.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, பெய் இன நங்கை அரங்கேற்றிய நிகழ்ச்சியாகும். பெய் இன மக்களின் 3 சுவை தேநீரானது, கசப்பான தேநீர், இனிப்பான தேநீர், நினைவு கூரும் தேநீர் என்பனவாகும். வாழ்க்கை பற்றிய பெய் இன மக்களின் உணர்வு, இத்தேநீர் போன்றது. அதாவது, முதலில் கசப்பு, அடுத்து இனிப்பு, இறுதியில் மீட்டாய்வு என்பதாகும். பெய் இன நங்கை சிங்ஹுவா, இது பற்றி அறிமுகப்படுத்தினார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் தாங் வமிசக் காலத்தில் இத்தகைய தேநீரானது, தாலி பிரதேத்தின் அதி உயர் அதிகாரியான மன்னர் நென்சாவ், பயணிகளை உபசரிக்கும் போது அளித்த அரண்மனை தேநீர் ஆகும். பின்னர், இத்தேநீர் மக்களிடையே பரவி, தனிச்சிறப்பியல்பு வாய்ந்த பெய் இனத் தேநீராக மாறியுள்ளது என்றார் அவர்.
1 2 3
|