
இந்நகரின் வீதிகளிலும் சந்துகளிலும் சீனச் சுதேச துணி, சலவைக்கல், வெள்ளிப் பொருள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இப்புராதன நகரில், நவீன மயமாக்க நிலைமையையும் உணரலாம். எடுத்துக்காட்டாக, இந்நகரின் வெளிநாட்டவர் வீதியில், பல்வகை பாரம்பரிய கலைப்பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறுபட்ட பாணியில் கட்டியமைக்கப்பட்ட மேலை நாட்டு உணவகங்கள், காப்பி அகம், மது அகம் ஆகியவையும் உள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இவ்விடத்தில் உலா வருகின்றனர். விடுமுறைகழிக்கின்றனர்.

நீண்டகாலம் வசிக்கின்றனர். கனேடிய பயணி லாரண்டியூ கூறுகின்றார், இங்குள்ள மொழி, தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது என்று உணர்கின்றேன். நானும் கற்றுக்கொள்கின்றேன். இங்குள்ள பண்பாட்டை மேலும் நன்கு அறிந்துகொள்வதற்கு இது துணை புரியும் என்று கருதுகின்றேன். தாலி மக்களும் யுன்னான் மாநில மக்களும் நட்பார்ந்தவர்கள். தாலியின் இயற்கை காட்சி எழில் மிக்கது. யுன்னானில், சுற்றுலா வசதியானது. இங்குள்ள மக்களுடன் பரிமாற்றம் மேற்கொள்வது எளிது என்றார் அவர்.
1 2 3
|