• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-22 11:07:10    
தாலி நகரம்

cri

 3 சுவை தேநீரை அருந்தும் அதே வேளையில், ழஹய் ஏரியிலிருந்து வடக்கை நோக்கிப் பார்க்கும் போது, தாலியிலுள்ள மற்றொரு பிரபல காட்சி இடமான சொன்சன் கோயில் 3 கோபுரங்களையும் கண்டுகளிக்கலாம். அவை மூன்று பெரிய பேனாக்கள் போல, புராதன தாலி நகரை மேலும் அழகாக்கியுள்ளன. சான்சன் கோயிலின் 3 கோபுரங்கள், யுன்னான் மாநிலத்திலுள்ள தொன்மை வாய்ந்த கட்டடமாகும். 3 கோபுரங்கள், வேறுபட்ட பாணியில் கட்டியமைக்கப்பட்ட செங்கல் கோபுரங்களாகும். நடுவில் அமைந்துள்ள சியெசிங் என்னும் கோபுரம், முக்கிய கோபுரமாகும். அது, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தாங் வமிசத்தின் நடுப்பகுதியில் கட்டியமைக்கப்பட்டது.

16 மாடிகளைக் கொண்ட சதுர வடிவத்திலான இக்கோபுரத்தின் உயரம் சுமார் 69 மீட்டர் ஆகும். இதன் வடக்கிலும் கிழக்கிலும் கட்டியமைக்கப்பட்ட இரு சிறிய கோபுரங்களின் உயரம் தலா 42 மீட்டராகும். இவ்விரு கோப்புரங்களின் வடிவத்தில் வேறுபாடு ஏதும் காணப்படவில்லை. புராதன தாலி நகரம், யுன்னான் மாநிலத்தில் நீண்ட வரலாறுடைய தொன்மை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். இதுவரை இந்நகரில், பல நூறு ஆண்டுகளுக்கு முந்திய அடிப்படை கட்டமைப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வீதிகள் ஒழுங்கான முறையில் அமைந்துள்ளன. மக்களின் வீடுகளில் பண்டைக் கால மணம் கமழுகின்றது. சூழ்நிலை அமைதியானது.
1  2  3