
Yi இன மக்கள்
தகவல் பரவல், இவ்வளவு விரைவான இன்று, கல்வியியல் ஆராய்ச்சியில், ஈடுபடுவது என்பது, கதவை மூடி, தனியாக செய்வதல்ல. அறிவாளர்கள், உலக்ததை கருத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச ரீதியிலான கல்வியியல் பரிமாற்ற நடவடிக்கைகளில் அதிக அளவில் பங்கெடுக்க வேண்டும் என்று சீனாவின் பிரபலமான Yi இனவியல் நிபுணரும் Yi இன அறிவாளருமான பமோயயி அம்மையார் தெரிவித்திருக்கின்றார். அவர் கூறியதாவது:

Yi இன மகளிர்
சிறுபான்மை தேசிய இன ஆய்வில் ஈடுபடும் அறிவாளர் என்ற முறையில் சொந்த கல்வியியல் ஆய்வு தரத்தை உயர்த்தி, சீனாவின் தேசிய இனப்பிரச்சினை ஆய்வுக்கு சாதனை வழங்க வேண்டுமாயின், தொலைநோக்குடையுடையவராக இருக்க வேண்டும். தமது கல்வியியல் சாதனை பற்றிய ஆய்வு கட்டுரையை சர்வதேச அரங்கில் படிக்க வேண்டும். தாமும், சர்வதேச ரீதியிலான மிகப் புதிய தத்துவத்தையும் வழிமுறையையும் அறிந்து கொண்டு, சர்வதேச கூட்டங்களில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தற்போது, உலகில், பத்துக்கு மேலான நாடுகளின் அறிவாளர், Yi இனவியல் பற்றிய ஆழமான ஆய்வில் ஈடுபடுகின்றனர். திபெத் இனம், Miao இனம் Yao இனம் முதலியவற்றின் தேசிய இன வரலாறு, பண்பாடு தொடர்பான உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சியும் பரிமாற்றமும் மிகவும் சுமுகமாக நடைபெறுகின்றன. 1 2 3
|