• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-24 14:43:00    
வளமடைந்த திபெத் இன விவசாயி அ லு

cri

அ லு என்பவர், திபெத்திய லாசா புறநகரில் உள்ள ஒரு திபெத்தின் விவசாயியாவார். அதி துவக்கத்திலேயே திபெத்தில், புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வெப்பக்கூடு அறையில் காய்கறி பயிரிடுவோர், அவராவார். அவரது புத்தாக்க எழுச்சியினால், அவருக்கு ஏராளமான வருமானம் கிடைத்துள்ளது. இது மட்டுமின்றி, அவரது வீட்டிற்கு அருகிலான திபெத் இன கிராமவாசிகளும் நன்மை பெற்று சீரான வாழ்க்கை நடத்துகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், அ லு காய்கறி பயிரிடுவது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

அ லு, முழுக்க முழுக்க ஒரு திபெத்தின் ஆண் ஆவார். அவர் உயரமானவர். கறுப்பு மற்றும் சிவப்பு நிற முகம், பார்ப்பதற்கு அவர் ஒரு விவேகமிக்கவர். அ லுவின் வீடு, லாசா நகரின் வடக்கிலான தெங் லு தே சிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகரப் பிரதேசத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், வெளியே போவதற்கு போக்குவரத்து மிகவும் வசதியானது.

1  2  3