திபெத் பாணியுடைய அவர்தம் வரவேற்பு அறையில் புத்தம் புதிய Strawberry தக்காளி முதலிய பழவகைகள் காணப்படுகின்றன. அவை, தம் குடும்பத்தின் வெப்பக்கூடு அறையிலிருந்து விளைந்தவை என்று அவர் தெரிவித்தார்.
1989ம் ஆண்டு காய்கறி பயிரிடத்துவங்கியதாக அ லு கூறினார். அப்போது, தொழில்நுட்பம் தெரியாததால், செவ்வனே பயிரிட முடியவில்லை. பின்னர், உள்ளூர் அரசு, அவருக்காக ஹான் இன தொழில் நுட்ப வல்லுநர் ஒருவரை வரவழைத்தது. பின்னர், வெப்பக்கூடு அறையில் காய்கறி பயிரிடும் தொழில் நுட்பத்தை அ லு கற்றுத் தேர்ந்தார். அவர் கூறியதாவது:
"முன்பு, எனக்கு அனுபவம் இல்லாததால், காய்கறி பயிரிட்டும், நல்ல பயன் பெறவில்லை. மாவட்ட அரசின் உதவியுடன் தான், வெப்பக்கூடு அறையில் காய்கறி பயிரிடுகின்றேன். தற்போது, காய்கறிக்கான விற்பனை விறுவிறுப்பாகின்றது. காய்கறியின் வகைகளும் அதிகமாக உள்ளன. பச்சை மிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய், Strawberry முதலியவை அவற்றில் அடங்கும். இப்போது, சுமார் ஒரு ஹெக்டர் பரப்பளவில் காய்கறி மற்றும் பழங்களைப்பயிரிடுகின்றேன். ஆண்டுக்கு ஏற்குறைய 50 ஆயிரம் யுவான் வருமானம்" என்றார், அ லு.
1 2 3
|