காய்கறி பயிரிடுவது அவ்வளவு கடினமானதல்ல என்பது போலிருக்கின்றது. இருப்பினும், சராசரியாக கடல்மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரமுடைய திபெத்தில், பச்சையான காய்கறிகளை வளர்ப்பது என்பது லேதானதல்ல. உயரமான கடல் மட்டம் தவிர, திபெத்தில், பகல்-இரவு தட்ப வெப்பநிலை, பெரிதும் வேறுபட்டது. காற்று கடுமையானது, இத்தகைய காலநிலையில் காய்கறி நன்றாக வளர்வதில்லை. எனவே, முன்பு திபெத்தில் காய்கறி அற்புதமானது. கடந்த பல்லாண்டுகளாக, திபெத் இன மக்கள் காய்கறி உட்கொள்ளாத பழக்கம் நிலவுகின்றது. இக்காரணங்களினால், காய்கறி பயிரிடுவதன் துவக்கத்தில், இன்னல்கள் பலவற்றை அ லு சந்தித்தார். உள்ளூர் அரசு, அவருடைய இன்னலைக் கண்டு உரிய நேரத்தில் அவருக்கு உதவி அளித்துள்ளது.
பல்லாண்டுகால முயற்சி மூலம், மாவட்டத்தில் காய்கறி பயிரிடும் வல்லுநராக அ லு மாறியுள்ளார். அன்றி, மற்ற திபெத் இன விவசாயிகளுக்கு உந்துவிசை பங்கை ஆற்றியுள்ளார் என்று டெலுங்தே சிங் மாவட்டத்தின் அதிகாரி பாசங்ஸிசெ கூறினார். அவர் கூறியதாவது:
"முன்மாதிரியாக விளங்கும் அ லு மூலம், பன்றி வளர்ப்பு குடும்பம், வெப்பக்கூடு அறையில் காய்கறி வளர்க்கும் குடும்பம் ஆகியவையும் அதிகமான வருமானம் பெற்றிருக்கின்றன. தற்போது மாவட்டத்தில் 4 குடும்பங்கள் வளமடைந்துள்ளன. அ லுவின் வருமானம் குறிப்பிடத்தக்கது. அன்றி, தாம் வளமடைவதிலான அனுபவத்தையும் மற்றவருக்கு சொல்லிக்கொடுத்தார். ஆதலால், மாவட்டத்திலுள்ள பொது மக்கள், காய்கறி பயிரிடுவதிலும் பிராணி வளர்ப்பதிலும் உற்சாகமடைந்துள்ளனர்" என்றார், அவர். 1 2 3
|