• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-29 14:53:00    
சிங்கியானின் சிறுப்பான்மை தேசிய இன கல்வி

cri

சிங்கியான் கல்வியின் வளர்ச்சிக்கு உதவி அளிக்க, சீன மத்திய அரசு, பல்வேறு துறைகளில் மாபெரும் ஆதரவை வழங்கியுள்ளது. சிங்கியாங்கின் 56 மாவட்டங்கின் 20 லட்சத்து 50 ஆயிரம் வறுமை மாணவர்களில் இலவச கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு, இவ்வாண்டு சப்டெம்பர் திங்கள் முதல் நாள் முதல், 14 கோடி ரென்மின்பி யுவானை முதலீடு செய்துள்ளது. புதிய சீனா நிறுவப்பட்ட பின், திபெதை தவிர, மத்திய அரசு பெரும் தொகை முதலீடு செய்து, மிக பெரிய அளவில் நடத்தப்படும் இலவச கட்டாயக் கல்வி, இதுவாகும். திட்டப்பணி மற்றும் நிதி ஆதரவு தவிர, மத்திய அரசும், பல்வேறு அமைச்சகங்களும், திறமைசாலி ஆதரவையும் துவக்கியுள்ளது. Zhao De Zhong அறிமுகப்படுத்தியதாவது:

சிங்கியான்வுக்கு சீன மொழி ஆசிரியர் உதவியை அளிக்கும் திட்டப்பணியை, இவ்வாண்டு, கல்வி அமைச்சகம், நிதி அமைச்சகம், சிறுப்பான்மை தேசிய இன விவகாரங்களுக்கான அரசு ஆணையம் ஆகியவை, துவக்கியுள்ளன. சீன மொழி கல்விக்கு உதவியளிப்பதற்கு மத்திய அரசு 6 கோடி யுவானை முதலீடு செய்யவுள்ளது. சிங்கியாங்கில் சீன மொழி ஆசிரியர் குறைவு, அவர்களின் கல்வியறிவு குறைவு, கல்வி கருத்து பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. உள்புறப்பிரதேசத்து ஆசிரியர்கள், கல்வி மூலவளத்தை மட்டுமல்ல, நல்ல கல்வி வழிமுறையையும் கொண்டுவந்துள்ளனர். உதவி பெற்றுள்ள பெரும்பாலான பள்ளிகள், ஒடுக்குப்புற பிரதேசத்தில் அமைந்துள்ளன. சீன மொழி ஆசிரியர் குறைவாக இருப்பதால், பல பள்ளிகள், சிங்கியான்வுக்கு உதவியளிக்கும் ஆசிரியர்களை சார்ந்திருக்கின்றன என்று, Zhao De Zhong கூறினார்.

மத்திய அரசு மற்றும் தன்னாட்சி பிரதேசத்து அரசின் பல ஆண்டுகளின் முயற்சி மூலம், சிங்கியாங்கின் தேசிய இன கல்வி குறிப்பாக, இரு மொழி கல்வி பெருமளவில் வளர்ச்சியடைந்துள்ளது. தமது இன மொழியை பயன்படுத்தும் அடிப்படையில், சீன மொழியை கிரகித்துக்கொள்வது என்பது, சிறுப்பான்மை தேசிய இன கல்வியின் தரத்தையும் மக்களின் கல்வியறிவையும் உயர்த்தி, பின்தங்கிய நிலைமையை முழுமையாக மாற்றலாம் என்று, சமூக பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியுடன், சிங்கியாங்கின் பல்வேறு இன மக்கள் படிப்படியாக அறிந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளில், தன்னாட்சி பிரதேச அரசு, சிறுப்பான்மை தேசிய இன கல்விக்கு முன்னுரிமை வழங்குவதை, சிங்கியான் கல்வி வளர்ச்சியின் முக்கிய நெடுநோக்கு திட்டமாக கொண்டு, போதியளவில் கவனம் செலுத்தியுள்ளது. கல்வி வளர்ச்சி திட்டத்தை வகுக்கும் போது, சிறுப்பான்மை தேசிய இன கல்வியின் வளர்ச்சி அளவு, வேகம் ஆகியவை, முதலில் உறுதிப்படுத்தப்பட்டுகின்றன. இவ்வாண்டு, தன்னாட்சி பிரதேசம், சிறுப்பான்மை தேசிய இன மக்களுக்கான தொலை தூர கல்வி கட்டுமானத்தை விரைவுப்படுத்தி, கல்வி மூலவள கிடங்கை நிறுவி, தொலை தூர கல்வியை ஏற்றுக்கொள்ளும் பள்ளிகளை விரிவாக்கி, சிறந்த கல்வி மூலவளத்தை கூட்டாக பயன்படுத்துவதை உண்மையாக நனவாக்கியுள்ளது.


1  2  3