
இத்தகைய பண்பாட்டின் மீதான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுச்செல்வத்துக்கான பாதுகாப்பு மற்றும் காப்பாற்றுதல் திட்டப்பணியை சீன அரசு நடைமுறைப்படுத்தத்துவங்கியுள்ளது. தற்போது, 30க்கும் அதிகமான தேசிய இன நாட்டுப்புறப்பண்பாட்டு நிகழ்ச்சிகள், பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, பயனுள்ள முறையில் பாதுகாக்கப்படுகின்றன.
திபெத் தன்னாட்சிப்பிரதேசத்தின் புகழ் பெற்ற "கெசர் காவியம்" என்பது, சீன அரசு வகுத்துள்ள தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாகும். இக்காவியத்தின் திபெத் மொழி மற்றும் ஹான் மொழியில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஒளித்தட்டு முதலிய ஒலி மற்றும் ஒளி நாடாக்களும் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் திபெத் இன மக்களுக்கு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் பொருட்டு, சிறப்பு அரங்கேற்ற கலை அணியும் அமைக்கப்பட்டுள்ளது.
1 2 3
|