
சீனாவின் பல்வேறு தேசிய இனங்கள் துவக்கி வைத்த பண்பாடு, சீனாவின் மதிப்பு மிக்க செல்வமாகும். எனவே, சிறுபான்மைத் தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டைப் பாதுகாப்பது, சீனாவின் பல்வேறு துறைகளுக்கு ஒத்தது; சீனா, சிறுபான்மைத் தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டைப் பாதுகாப்பதர்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு என்று, சீன சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜி சிங் வ் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பல்வேறு தேசிய இனங்களும் இணைந்து சீன மக்களின் நெடிய பண்பாட்டினை உருவாக்கியுள்ளன. உலகளாவிய நிலையில், பலதரப்பட்ட பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்புது, ஒத்த கருத்தாகும். பலதரப்பட்ட பண்பாட்டைப் பாதுகாப்பது, சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டைப் பாதுகாப்பதென பொருட்படுகின்றது. சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டைப் பாதுகாப்பது, மதிப்புமிக்கது என்பது, இதிலிருந்து புலப்படுகின்றது" என்றார் அவர். 1 2 3
|