
சிறுபான்மைத் தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டைப் பாதுகாக்க, நடுவண் அரசு, தேசிய சட்டவிதிகளை வகுத்துள்ளது. தவிர, பல்வேறு உள்ளூர் அரசுகள் தத்தம் நடைமுறை நிலைமைக்கிணங்க, மேலும் வளைந்து கொடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன, தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலம், சீனாவில் சிறுபான்மை தேசிய இனங்கள் அதிகமாக உள்ள மாநிலம். இம்மாநிலம், சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டைப் பாதுகாப்பதை, சந்தைப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்வதுடன் ஒன்றிணைத்து, சுற்றுலா, கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றம் முதலியவற்றின் மூலம், பண்பாட்டின் பாதுகாப்பை விரைவுபடுத்தி, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவித்துள்ளது.
1 2 3
|