ஆறு திங்கள் உருண்டோடின. இந்த 15 கறவைப் பசுகளில் எட்டு, பால் தரத் துவங்கியுள்ளன. அவற்றில் ஒன்று, குட்டி ஒன்றும் போட்டது.
வணிகம் செய்வதில் டாங் சங் விவேகமிக்கவர். பத்து ஆண்டுகளுக்கு முன், கிராமவாசிகள், கால நிலையைச் சார்ந்து வாழ்ந்தனர். வீட்டு பிராணிகளை வளர்ப்பதன் மூலம் தன் தேவையை நிறைவு செய்தனர். ஆனால், அப்போழுதே, டாங் சங், தச்சுத் தொழில் பெற்றுள்ள பணத்தைக் கொண்டு, பார வண்டி ஒன்றை வாங்கி, போக்குவரத்துத் துறையில் ஈடுபட துவங்கினார். இவ்வாறு அவர் வளமடைந்து சியாங் ச்சி மாவட்டத்திலும், தொலைத் தூர பகுதிகளிலும், சுற்று வட்டாரத்திலும் புகழ் பெற்ற வள குடும்பமாக அவரது குடும்பம் மாறியுள்ளது.
1 2 3
|