
பால் விற்பனையை விரிவாக்கும் வகையில், மாவட்ட நகரிலுள்ள சில ஹோட்டல்களுடன் பால் விற்பனை உடன்படிக்கைகளில் அவர் கையொப்பமிட்டார். அதே வேளையில், ஒரு பகுதி பாலை, வெண்ணெயாகப் பதனீடு செய்து விற்பனை செய்தார்.
டாங் சங், கறவைப் பசு வளர்ப்பில் செய்த முதலீடு, படிப்படியாக மீட்கப்பட்டு வருவதுடன், கிராமத்திலுள்ள சில விவசாயிகளும் இடையர்களும் கறவைப் பசு வளர்க்கத் துவங்கியுள்ளனர். டாங் சங், தணிவுடன் கறவைப் பசு வளர்ப்பது, கிராமத்தில் சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கின்றது. வருமானத்தை ஈட்டுவதற்கு கிராமவாசிகளின் உற்சாகம் ஓங்கி வளர்கின்றது என்று கிராமத்து தலைவர் பு. வாங் தேய் கூறினார்.
"டாங் சங் கறவைப் பசுகளை வாங்கியது, கிராமவாசிகளுக்கு மிகப் பெரும் ஊக்கமளித்துள்ளது. தற்போது, வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் அனைவருக்கும் உண்டு. கறவைப் பசுகளை வாங்காமலிருந்தாலும், இதர துணைத் தொழிலை நடத்தி சொந்த வருமானத்தை அதிகரித்து, எங்கள் முழு கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த விரும்புகின்றனர்" என்றார், அவர். 1 2 3
|