இப்போது, கறவைப் பசு வளர்ப்பு, டாங் சங்கின் அதிக நேர்ததை வகிக்கின்றது. இந்த கறவைப் பசுகள், இக்குளிர்காலத்தில் சிரமப்படுமானால், பல்லாண்டுகளாக அவர் சேமித்து வைத்த பணம் கரைந்து போகும். அன்றி, மேலதிகமான கடனையும் செலுத்த வேண்டி ஏற்படும். இந்த நெருக்கடி நிலையைக் கவனத்தில் கொண்டுள்ளாரா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், அவர் கூறியதாவது:
"கருத்தில் கொண்டுள்ளேன். ஒரு மாடு வாங்குவதற்கு பத்தாயிரத்துக்கு மேலான யுவான் வேண்டும். ஒரு கறவை பசுக்கு ஏதாவது உடல்நலக்கேடு ஏற்பட்டால், எனது குடும்பத்துக்கு பேரிழப்பு ஏற்படும்" என்றார், அவர்.
பேசி முடிந்ததும், டாங் சங் மெளனம் சாதித்தார். அந்த கன்றுக் கட்டியைத் தழுவிய வண்ணம் மகிழ்ச்சியுடன் கூறுகையில், தற்போது பல்வேறு நிலை வாரியங்கள் உதவி அளித்துள்ளன. பிரச்சினை ஏதும் ஏற்படாது என்று அவர் கூறினார். கறவைப் பசுகளை வாங்கி வளர்ப்பதானது, கிராமத்து விவசாயிகளும் இடையர்களும் வளமடைவதற்கு வழிகாட்டுவதன் நோக்கமுடையது என்று டாங் சங் செய்திமுகவருக்கு பேசி மகிழ்ந்தார்.
1 2 3
|