சீனா ஒரு வேளாண்மை பேரரசு ஆகும். வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அது உலகில் 6வது இடம் வகிக்கிறது. தற்போது சீனாவில் தயாராகும் வேளாண் உற்பத்திப் பொருள் மேலதிக வெளிநாட்டு நுகர்வோரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரான்சிலிருந்து வந்த Cyril Sayag, சீனாவில் 4 ஆண்டுகளாக பணி புரிந்து தங்கி வாழ்ந்துள்ளார். தமது ஊரான பிரான்சில் சீனாவிலிருந்து வந்த வேளாண் உற்பத்திப் பொருளை மக்கள் அடிக்கடி காணலாம் என்று அவர் செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது—
"ஒவ்வொரு பிரெஞ்சு நகரிலும், சிறு நகரில் கூட, சீன உணவகம் அல்லது சீன சிறப்பு அங்காடி நீங்கள் காணலாம். எனவே அங்கு சீன உணவு பொருட்களை வாங்குவது எளிது. சீன உணவு பொருட்களை மக்கள் பெருமளவில் நுகர்கின்றனர். நானும் பல முறையில் ருசி பார்க்கிறேன். சுவையாக உள்ளது" என்றார் அவர்.
கிழக்கு சீனாவின் ஷான் துங் மாநிலத்தில் அமைந்துள்ள Anqiu அந்நிய வர்த்தக உணவு பொருள் கூட்டு நிறுவனம், வேளாண் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வது, பதனீடு செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வதில் ஈடுபடும் ஒரு பெரிய ரக தொழில் நிறுவனமாகும். அதன் நிலையான சொத்துக்களின் மதிப்பு 50 கோடி யுவானாகும். பணியாளரின் எண்ணிக்கை 6000 அதிகமாகும். சீனாவில் 500 மிகப் பெரிய உணவு உற்பத்தி தொழில் நிறுவனங்களில் அது ஒன்றாகும். குளிர்முறை பாதுகாப்பு செய்யப்படும் காய்கறி, பழம் வகைகள், இறைச்சி ஆக்கப் பொருள் ஆகியவை அது உற்பத்தி செய்து பதனீடு செய்த வேளாண் உற்பத்திப் பொருட்தளில் முக்கிய இடம்பெறுகின்றன. 2003ஆம் ஆண்டில் அதன் விற்பனை மூல வருமானம் 56 கோடி யுவான் ஆகும். ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் முதலிய நாடு பிரதேசங்களில் அதன் உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகின்றன.
Anqiu கூட்டு நிறுவனத்தில், பூங்கா போன்ற ஆலை பிரதேசத்தின் சுற்றுச்சூழல், வரிசை வரிசையாக நிற்கின்ற வேலை களரிகள் ஆகியவை, இந்நிறுவனத்தின் வெளிப்புற சுற்றுச்சூழலுக்கான சிறப்பான மனப்பதிவு எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளன. உணவு பொருட்களுடன் நெருங்கிய தொடர்புடைய உற்பத்தி வேலை களரியின் உட்புற சுற்றுச்சூழல் மேலும் முக்கியமானது. அங்குள்ள சூழ்நிலையின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உத்தரவாதம் செய்யவும், உற்பத்திப் பொருட்கள் வெளிப்புற சூழலால் தூய்மை கெட்டாமால் தடுக்கவும், கண்டிப்பான நச்சு நீக்கும் செயல்முறை பலவற்றுக்குப் பின் பணியாளர் உற்பத்தி களரியில் நுழைய முடியும்.
1 2 3
|