Spinach உற்பத்தி மற்றும் பதனீட்டு களரியில், சீருடை அணிந்த தொழிலாளர்கள் உற்பத்தி நெறிக்கு முன் பரபரப்பாகவும் ஒழுங்கான முறையிலும் வேலை செய்கின்றனர். இந்த முன்னேறிய உற்பத்தி நெறி, அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளிலிருந்து உட்புகுத்தப்பட்டது. அது சர்வதேச முன்னேறிய நிலையை எட்டியுள்ளது. குளிர்முறைப் பாதுகாப்பு செய்யப்படும் Spinach உற்பத்தி முறை பற்றி, Anqiu கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் லியு ஹாய் யான் அம்மையார் எடுத்துக்கூறுகிறார்—
"வேளாண் உற்பத்திப் பொருட்கள் எங்கள் ஆலையின் முக்கிய உற்பத்தி பொருட்களாகும். Spinachக்கான சோதனை, தெரிவு, கழ்வு, மீண்டும் தெரிவு, குளிர்முறை பாதுகாப்புக்குப் பின், ஏற்றுமதி செய்யப்படும்" என்றார் அவர்.
சீனாவில் Anqiu கூட்டு நிறுவனம் பொன்ற தொழில் நிறுவனங்கள் மிக அதிகமாகும். அவை வெளிநாட்டுச் சந்தையில் வினியோகிக்கும் பல்வகைப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்களில், நீர் வாழ்வன பொருள், நவ தானியங்கள், காய்கறி, இறைச்சி ஆக்க பொருள், பழம் முதலியவை இடம்பெறுகின்றன. 2003ஆம் ஆண்டில், சீனாவின் வேளாண் உற்பத்திப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி பெறுமதி 2000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் முதலிய 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்த உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகின்றன.
பாதுகாப்பான சுகாதார சீன உணவு பொருட்களை அந்நிய நுகர்வோர் ருசி பார்க்கத் துணை புரியும் பொருட்டு, சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் பாடுபட்டு வேலை செய்துள்ளன. சீனத் தேசிய தரக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை தலைமை பணியகமானது, ஏற்றுமதிக்கான வேளாண் உற்பத்திப் பொருட்களின் தர நிர்வாகத்துக்கு நேரடியாக பொறுப்பான அரசு வாரியமாகும். பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட அதன் கிளைகள், ஏற்றுமதிக்கான வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரத்துக்கான முழுமையான கண்காணிப்பையும் நிறைவேற்றியுள்ளன.
அத்துடன், சீனாவின் வேளாண் உற்பத்திப் பொருள் தொழில் நிறுவனங்களின் மொத்த நிலையை உயர்த்த, தரக் கண்காணிப்புடன் தொடர்புடைய வாரியங்கள் அரும்பாடுபட்டு வருகின்றன. பல நடவடிக்கைகளையும் அவை மேற்கொண்டுள்ளன. கூட்டு நிறுவனம் சக தளம் என்ற உற்பத்தி நிர்வாக மாதிரியை பெருமளவில் பரவலாக்குவது என்பது பயன் தரும் நடவடிக்கைகளில் ஒன்றாகும.
1 2 3
|