முன்னர் சீனாவில் வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களில் பெருபாலானவை, கூட்டு நிறுவனம் சக விவசாயி குடும்பம் என்ற மாதிரியை மேற்கொண்டன. தொழில் நிறுவனம் பதனீட்டு செய்து உற்பத்தி செய்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் விவசாயி குடும்பங்களில் வந்தன. விவசாயிகளின் தொழில் நுட்ப நிலை தாழ்ந்த நிலையில் இருந்ததால், வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரம் உத்தரவாதம் செய்யப்படுவது என்பது, சிரமம்.
தொடக்கத்தில் வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரத்தை செவ்வனே பற்றிக்கொள்ளும் பொருட்டு, 90 ஆண்டுகளின் பிற்காலம் முதல், கூட்டு நிறுவனம் சக தளம் என்ற மாதிரி பரவலாக்கப்பட்டு வருகிறது. சீனத் தேசிய தரக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை தலைமை பணியகத்தின் ஏற்றுமதி இறக்குமதி உணவு பொருட்கள் பாதுகாப்பு பணியகத்தின் தலைவர் லி யுவான் பிங் கூறியதாவது—
"பயிரிடுவது மற்றும் நீர்வாழ்வன வளர்ப்பு தளத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவித்து வலுப்படுத்தவும், தொடக்கத்திலேயே ஏற்றுமதி உணவு பொருட்களும் வேளாண் உற்பத்திப் பொருட்களும் மாசுப்படாமல் தடுக்கவும், கூட்டு நிறுவனம் சக தளம் என்ற மாதிரியை நாங்கள் மேற்கொள்கிறோம்" என்றார் அவர்.
Anqiu கூட்டு நிறுவனத்தின் உற்பத்தி மாதிரி மற்றும் தயாரிப்பு செய் முறை, சீனாவிலுள்ள தென் கொரிய தூதரகத்தின் வேளாண்மை கவுன்சலர் Jeong Moon Seop இன் பாராட்டைப் பெற்றுள்ளது. சீனத் தேசிய தரக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை தலைமை பணியகத்தின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வந்து சோதனை பயணம் மேற்கொண்டார். Anqiu கூட்டு நிறுவனம் பொன்ற தொழில் நிறுவனங்களில் தயாராகும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டு சந்தையில் பெரும் போட்டியாற்றல் வாய்ந்தது உறுதி என்று அவர் கருதுகிறார். அவர் கூறுகிறார்—
"நீங்கள் வேளாண் உற்பத்திப் பொருட்களைப் பதனீடு செய்யும் போக்கு சுகாதாரமானது, பாதுகாப்பானது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பிரச்சினை இல்லை. அவற்றின் போட்டியாற்றல் மிக்கது" என்றார் அவர். 1 2 3
|